நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின…
நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, இந்தத் திட்டம் ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக (Pilot Project) நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படவுள்ள இந்த ட்ரோன் விமானங்கள் ஒரே நேரத்தில் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பயணிகள் ட்ரோன் போக்குவரத்து சேவைகள் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில், அந்த நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், இலங்கையின் எதிர்கால வான்வழிப் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

