இலங்கையில் விற்பனை செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களும் (sanitary towels), ஒக்டோபர் 8, 2026 முதல் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) தயாரிப்புச் சான்றிதழ் முத்திரையைக்…
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களும் (sanitary towels), ஒக்டோபர் 8, 2026 முதல் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) தயாரிப்புச் சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உரிய SLS தரச் சான்றிதழ் பெறாத எந்தவொரு உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களையும் உற்பத்தி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதை உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு தடை செய்கிறது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இறக்குமதி பரிசோதனைத் திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, அனுமதி பெற்ற பின்னரே உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறையானது, ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கான இலங்கை தரநிலை (SLS 1732) மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் மிக மெல்லிய (Ultra-thin/Slim) சானிட்டரி நாப்கின்களுக்கான இலங்கை தரநிலை (SLS 1748) ஆகியவற்றின் கீழ் வரும் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் எதிர்காலத்தில் அந்தந்த தரநிலைகளில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு இந்த உத்தரவு உட்பட்டிருக்கும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் தலைவர் எஸ். எம். டி. சூரியகுமார சார்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

