சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட்,…

சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில்,

அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள். பிள்ளைகளின் பாதுகாப்பு

இத்தகைய உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களையோ அல்லது மயக்கமடையச் செய்யும் பொருட்களையோ கலந்து, சிறுவர்களைக் கடத்திச் செல்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ குற்றவாளிகள் முற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய ஆபத்தான சூழல் நிலவுவதால், தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடனும், தொடர்ச்சியான அவதானத்துடனும் இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இத்தகைய அறிமுகமற்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பிள்ளைகளுக்குக் கற்பிப்பதும், அவர்கள் வெளியில் செல்லும் போது பெற்றோர்கள் கண்காணிப்பதும் மிக அவசியம் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.