இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.தற்போதைய விலை நி…
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

