இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திரப் பிரதிநிதிகளின் திருகோணமலை விஜயம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) சார்பாக, இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திர சமூகத்தின் உயர்ஸ்தானிகர்கள் கலந்து கொண்ட…

இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திரப் பிரதிநிதிகளின் திருகோணமலை விஜயம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) சார்பாக, இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திர சமூகத்தின் உயர்ஸ்தானிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வு, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்க(TDHA) தலைவர் குமார் ஜெயக்குமாரன் தலைமையில் திருகோணமலை பீச் ரிசோர்ட் ஸ்பாவில் இடம்பெற்றது.

திருகோணமலையின் வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில், மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – H.E. Badli Hisham bin Adam ,இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்– H.E. Dewi Gustina Tobing , தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் – H.E. Paitoon Mahapannaporn , மியான்மார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்– H.E. Marlar Than Htaik,வியட்நாம் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்– H.E. Trinh Thi Tam உட்பட கிழக்கு மாகாண பிரதம செயலாளர் குணநாதன், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் முக்கியமாக திருகோணமலையில் முதலீடு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள்,சுற்றுலா மேம்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்பு, ஏற்றுமதி சந்தைகளை நோக்கிய உள்ளூர் உற்பத்தித் துறை மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் உரையாற்றினார்.

இதில் உள்நாட்டு உற்பத்தியான நெசவு கைத்தொழில் மற்றும் பனை ஓலை உற்பத்தியிலான பொருட்களும் சந்தைப்படுத்தப்பட்டன.

கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.