நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என முதியோர் செயலகம் அறிவித்துள்ளது. இது குறித்து முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும், விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள…
நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என முதியோர் செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும், விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,முறைப்படி பதிவு நாடளாவிய ரீதியில் தற்போது 459 முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன.அவற்றில் இதுவரை 148 இல்லங்கள் மட்டுமே முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படாத ஏனைய முதியோர் இல்லங்கள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யத் தவறும் முதியோர் இல்லங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

