இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.அந்நி…
இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.அந்நியச் செலாவணி மேலும், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புலம்பயெர் தொழிலாளர்களிடம் இருந்தே ஆகக்கூடுதலான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைத்து வருகிறது. அதேவேளை அண்மைக்காலமாக தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

