முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்பு இல்லமாக இனிய வாழ்வு இல்லம் இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் இனியவாழ்வு இல்லத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக…

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்பு இல்லமாக இனிய வாழ்வு இல்லம் இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் இனியவாழ்வு இல்லத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இன்றையதினம்(10.06.2026)  இனிய வாழ்வு இல்லத்தின் இடைக்கால நிர்வாகத்தின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தருமான ச.சதாகரன்  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.இனியவாழ்வு இல்லம்அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லம் 57 மாணவர்களை கொண்டியங்குகின்ற இல்லமாக காணப்படுகின்றது.அதில் பல்கலைகழகத்தில் 8 மாணவர்களும், வள்ளிபுனம் பாடசாலையில் 10 மாணவர்கள், கேட்கும்திறன், வாய்பேசமுடியாத 39 மாணவர்களுக்கு இல்லத்தில் கல்விகற்று வருகின்றனர்.

கடந்த மூன்று மாத காலமாக செயற்பட்டுவரும் இடைக்கால நிர்வாகத்தில் நாம் பொறுப்பேற்றதற்கான காரணம் கடந்த (21.03.2026) ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட இருந்த வேளை யாப்பிற்கு முரணாக தொடர்ச்சியாக முக்கிய பதவிகளை வகிப்பதற்காக தெரிவு செய்யப்பட இருந்த போது பொதுச்சபையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் யாப்பு சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு யாப்பினை சீர்திருத்தி மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கருத்துக்களையும் பெறப்பட்டு யாப்பு சரியான முறையில் சீர்திருத்தப்பட்டது.இதனையடுத்து மீளவும் பொதுச்சபையினை கூட்டி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான காலக்கெடுவாக மூன்று மாத காலம் வழங்கப்பட்டது.முறைப்பாடுகள் பதிவு அக்காலப்பகுதியில் மூன்று பேர் கொண்ட மூன்று மாத காலத்திற்கு இடைக்கால நிர்வாகத்தினால் பிரதேச செயலாளர் இ.விஜயகுமாரின் நேரடி கண்காணிப்பில் செயற்படுத்தி வருகின்றோம்.இல்ல விடுதியில் ஆரம்பத்தில் போடப்பட்ட மெத்தைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதால் புதிய மெத்தைகள் போடப்பட்டுள்ளது.இயங்காத நிலையில் இருந்த மின் விசிறிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதுடன் பழுதடைந்த கணணிகள் திருத்தப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது.இல்லத்தில் இருந்து சாப்பாடு பொதி செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்வது குறித்த குற்றசாட்டுகள் இருந்தமையால் சாப்பாடு பொதி வெளியில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் பிரதேச செயலாளரை இங்கு அழைத்து முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை நேரடியாக காட்டி விளங்கப்படுத்தி ஆசிரியர்களுடன் உரையாடவிட்டு தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறிருக்கையில் கடந்த (30.06.2026) ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிட்டுள்ளார்.