டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,00 ஆக அதிகரித்துள்ளதாக தே…

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,00 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்கள் மற்றும் மூட்டுகளில் தீவிர வலி, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் தடிப்புகள் தென்படுமாயின் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.