இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல் இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நேற்று (07.07.2025) க…
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நேற்று (07.07.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் திரு. இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு - அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா ஒருவருக்கு ரூபா 90,000 வீதம் சாவகச்சேரி, நல்லூா் மற்றும் சாவகச்சேரி பிரதேச கொடுப்பனவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

