இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும், பொது இடத்தில் அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும், பொது இடத்தில் அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று(12.07.2026) ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலை மோதலுக்கு கண்டனம் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,

மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமாராக 6 மாதங்களாக கட்சி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதவொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கட்சி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள எங்களுடைய நிகழ்ச்சி நிரலில், இலங்கை தமிழரசுக்கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. சிலருக்கு இந்த விடயத்தை கேட்கும் பொழுது ஏளனமாக இருக்கும், ஆனால் இப்படியொரு சம்பவம் விரைவில் நடக்கும்.

கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கான காரணங்களை விரைவில் அநுர அரசாங்கம் கண்டறிய வேண்டும்.

அத்துடன், இதுபோன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சிலை உடைக்கப்படும்.. இதேவேளை, இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்திக் கொள்கின்றேன்.

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரான இரா. சம்மந்தனுக்கு உருவ சிலை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன். அப்படியாயின், அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும், ஆனால் பொது இடங்களில் நினைவு தூபி அமைக்கக் கூடாது.

இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதருக்கு கிழக்கில் சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியாது. அவ்வாறு பொது இடங்களில் சிலை அமைக்கும் பட்சத்தில், எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன், அதனை அகற்றுவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்படும்.

இந்த விடயத்தை வன்முறை, மிரட்டல், அச்சுறுத்தல் என கூறுவதற்கு முதலே இதனை அறிவித்துக் கொள்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.