இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -கிண்ணியா நிருபர்- கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு…

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா-மாஞ்சோலை பிரதேசத்தில் வசிக்கும், 55 வயதுடைய சந்தேகநபரே இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட வலம்புரிச்சங்கையும் சட்ட நடவடிக்கைக்காக கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரி நுவான் திலகரத்தன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.