இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு சேவை திணைக்களம் இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது.தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால்…
இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு சேவை திணைக்களம் இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது.தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

