இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடு…
இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

