கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகும்புர வீதியில் தம்புத்தேகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களினதும் ஓட்டுநர்கள் இருவரும், ஒரு மோட…

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகும்புர வீதியில் தம்புத்தேகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களினதும் ஓட்டுநர்கள் இருவரும், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் மற்றும் 7 வயதுக் குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.மேலதிக சிகிச்சைகள் காயமடைந்தவர்கள் உடனடியாக பெரகும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்கள் பம்பரே மற்றும் பெரகும்புர பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 63 வயதுடையவர்களாவர்.