இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் எல்.வி.எம் 3 மற்றும் ஸ்பேடெக்ஸ் திட்ட இயக்குநர்கள், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்த…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் எல்.வி.எம் 3 மற்றும் ஸ்பேடெக்ஸ் திட்ட இயக்குநர்கள், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்துதல் பிரிவு மேலாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களும் அடங்குவர். பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில்

மத்திய அரசு விண்வெளித் திட்டங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து வருவதால், வளர்ந்து வரும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தங்கள் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேடி ஈர்க்கின்றன. அதிக வாய்ப்புகள் காரணமாகப் பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய விண்வெளித் துறை தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

மத்திய விண்வெளித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் 'குழு ஏ' பிரிவு ஊழியர்களின் விருப்ப ஓய்வு மற்றும் இராஜினாமா கோரிக்கைகள் இனி வழக்கம் போல எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எஸ்.ஜி மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களின் கோரிக்கைகள் இறுதி முடிவுக்காக உரிய பரிந்துரைகளுடன் மத்திய விண்வெளித் துறைக்கே நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.