லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Jaff…

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jaffna Kings அணியின் உரிமையாளரான மஞ்சோட் கல்ரா மற்றும் அவருக்கு உதவி வழங்கியதாக கூறப்படும் இந்திய பிரஜையான யுவராஜ் புஷ்பா ஆகிய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு போட்டிகளுக்காக 3 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்க திட்டமிடப்பட்டதாகவும், இதற்கான உரையாடல் பதிவுகள் மற்றும் 95 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.