ஜெர்மனியின் இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களை அதிகரிக்கவும் அந்த நாட்டு ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் மெர்ஸ் எடுத்துள்ள முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகளின்படி, இராணுவப் பெருக்கம்…

ஜெர்மனியின் இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களை அதிகரிக்கவும் அந்த நாட்டு ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் மெர்ஸ் எடுத்துள்ள முடிவுகளுக்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகளின்படி, இராணுவப் பெருக்கம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்வதை விரும்பாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக 35% முதல் 40% வரையான வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.ஜெர்மனி  மக்களின் எதிர்ப்பு  இது, பாதுகாப்புத் துறைக்காகப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று முதலீடு செய்யும் ஜனாதிபதி மெர்ஸ் மற்றும் அவரது உப ஜனாதிபதியின் திட்டங்களை அந்த நாட்டு மக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பாரம்பரிய இராணுவப் படையாக ஜெர்மனியை மாற்றும் நோக்கில், 2030 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்புச் செலவினங்களுக்காக சுமார் 900 பில்லியன் டொலர் வரை ஒதுக்கீடு செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, "ஐரோப்பிய நாடுகள் தங்களை அதிக அளவில் நேட்டோவில் (NATO) ஈடுபடுத்திக் கொள்வது, அந்த அமைப்பை அமெரிக்காவுடன் மேலும் நெருக்கமாக்கும்" என ஜனாதிபதி மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை திருப்திப்படுத்துவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவின் அறிவுறுத்தலின்படி, தாங்கள் பணத்தை மிகவும் திறம்பட முதலீடு செய்து வருவதாகவும், ட்ரம்ப் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புப் பங்களிப்பை ஜெர்மனி தற்பொழுது செயல்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி மெர்ஸ் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.