அமெரிக்கப் படைகள் ஜோர்தானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளது. ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதலி…

அமெரிக்கப் படைகள் ஜோர்தானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளது.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காணாமல் போனதாகவும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் படைகள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் மோதல்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் நட்பு சக்தியான மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது.

அமெரிக்கா ஈரானில் உள்ள பாலங்கள், மின்சார வசதிகள் மற்றும் பிற இலக்குகளைத் தாக்கியுள்ளது. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கியுள்ளது.

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் கடந்த வாரம் நடத்திய தாக்குதல்களால் அங்கு அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஈரானில் உள்ள பாலங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய இடங்கள் பலவற்றில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தவிருப்பதாக குவைத்தும் பஹ்ரைனும் நேற்று காலை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வான்வழி பாதுகாப்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. (a)