கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய மொத்த அந்நியச் செலாவணி 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று…
கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய மொத்த அந்நியச் செலாவணி 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரியவந்துள்ளது.மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.வீழ்ச்சி 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 23.2 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
2025 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானத்தை 169.5 மில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானத்திலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

