கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டு சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமி…

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டு சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 3,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை ஆவார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் கோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.