இலங்கையில் முதல் முறையாக, ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்ட அசல் 2026 ஆர்ஜென்டினா ஜெர்சியை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் எல்லாக் காலங்களிலும் தலைசிறந…
இலங்கையில் முதல் முறையாக, ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்ட அசல் 2026 ஆர்ஜென்டினா ஜெர்சியை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த வீரராக (The GOAT) கருதப்படும் மெஸ்ஸியின் மகத்தான சாதனைகளைப் பிரதிபலிக்கும் விலைமதிப்பற்ற சேகரிப்புப் பொருளாகும்.
2026 FIFA உலகக் கோப்பையைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ரிட்ஸ்பரி ரொக்கோவா ரசிகர்களுக்குக் கையொப்பமிட்டப்பட்ட ஜெர்சியை விடவும் மிக அதிகமான ஒன்றை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. லியோனல் மெஸ்ஸியின் கடைசி FIFA உலகக் கோப்பை போட்டியுடன் ஒத்துப்போகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அசல் ஆர்ஜென்டினா ஜெர்சியானது கால்பந்து வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்தைக் குறிக்கிறது. இன்று ஒரு அரிய சேகரிப்புப் பொருளாக இருக்கும் இதன் வரலாற்று முக்கியத்துவமும் மதிப்பும் தலைமுறை தலைமுறையாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது உண்மையிலேயே வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய பரிசாக அமைகிறது.
2026 ஆகஸ்ட் 20 வரையிலான இந்த ஊக்குவிப்பு ஊடாக ரிட்ஸ்பரி ரொக்கோவா சாக்லேட்டை வாங்கவும், QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது ரொக்கோவாவின் சமூக ஊடகப் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி போட்டி இணையதளத்தை அணுகவும் அழைக்கப்படுகிறார்கள். ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதில் ஒவ்வொரு ரிட்ஸ்பரி யும் ரொக்கோவா சாக்லேட்டும் ஒரு செல்லுபடியாகும் பதிவாகக் கருதப்படும்.
CBL ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர், நிஷுஷா பஸ்தியன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், "உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைத்து, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் அபாரமான ஆற்றல் கால்பந்தாட்டத்திற்கு உண்டு. ரிட்ஸ்பரி யில், எங்கள் வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைவதற்கும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூரக்கூடிய அற்புதமான அனுபவங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் எப்போதும் முயல்கிறோம். 2026 FIFA உலகக் கோப்பையைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், இந்த ஊக்குவிப்பானது இலங்கைக் கால்பந்து ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவத்தின் பகுதியாக இருப்பதற்கும் கால்பந்து வரலாற்றின் அரிய நினைவுச் சின்னத்தை தமதாக்கிக்கொள்வதற்குமான வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.
இந்த ஊக்குவிப்பிற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில் ரிட்ஸ்பரி ரொக்கோவா, உலக கால்பந்தின் மற்றொரு ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட, அசல் போர்த்துக்கல் ஜெர்சியை வெல்லும் வாய்ப்பையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்த ஊக்குவிப்பின் போது ஒவ்வொரு நாளும் 10 வெற்றியாளர்கள் வீதம் 30 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 300 ஜெர்சிகள் அன்பளிப்புப் பரிசுகளாக வழங்கப்படும். இதன் மூலம், மேலும் அதிக கால்பந்து ரசிகர்கள் சிறப்பான நினைவுச் சின்னத்தை வீட்டிற்கு கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இலங்கையின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) தலைவர், ஜஸ்வர் உமர், இம்மயற்சி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வாறான வாய்ப்பை முதன்முறையாக இலங்கைக்குக் கொண்டு வருவது உள்ளூர் கால்பந்து சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். கால்பந்து சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இது போன்ற அனுபவங்கள் விளையாட்டை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்க உதவும் அதே நேரத்தில் விளையாட்டைச் சுற்றி அதிக உற்சாகத்தை உருவாக்குகின்றன. புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய வழிகளில் கால்பந்தைக் கொண்டாடும் வாய்ப்புகள் ஊடாக அடுத்த தலைமுறை வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் இலங்கையின் கால்பந்து சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் இருவரை மையமாகக் கொண்ட இந்த சிறப்பு ஊக்குவிப்பில், நாடெங்கிலும் உள்ள நுகர்வோரை உற்சாகத்துடன் கலந்து கொள்ள ரிட்ஸ்பரி ரொக்கோவா அழைக்கின்றது. தங்களுக்குப் பிடித்தமான சாக்லேட்டை ரசித்தபடியே, இலங்கையில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கால்பந்து நினைவுச் சின்னங்களிலேயே மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெரிதும் விரும்பப்படும் ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை அவர்கள் பெறலாம். இது கால்பந்து வரலாற்றின் அழியாத ஒரு பகுதியை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாகும்.

