'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 88 வயதான ஜானகி, உடல்நலப் பாதிப்பு காரணமாக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க…
'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
88 வயதான ஜானகி, உடல்நலப் பாதிப்பு காரணமாக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு, சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. பாடகி ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் (X) தளப் பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டிருப்பதாவது:
"அரை நூற்றாண்டு ஆறுதலே... அடங்கிவிட்டாயா? 'சிங்கார வேலனே தேவா'வில் நாதஸ்வரத்தை வென்று காட்டிய கீதவாணியே... முடிந்துவிட்டதா உன் மூச்சு? தாய்மையாய், தமிழாய், காதலாய், கருணையாய், கண்ணீராய், புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி... உனக்கும் மரணமா?
'நாதம் என் ஜீவனே' என்றாயே... உன் நாதம் இருக்கிறது, ஜீவன் இல்லையே! சிரித்த முகமும், சிவப்பு நிலாப் பொட்டும், ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவதுபோல் செவ்வாய் அசைக்கும் அழகும், கண்களை விட்டுக் காணாமல் போகுமோ?
நீ பாட முடியாத பாடலென்று எதுவுமே இல்லை. உன் பாடல் கேளாமல் இரவுகள் விடிவதில்லை. கண்ணதாசன் எழுதி, நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன்:
'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்... உன்னைத் தொடர்ந்திருப்பேன், என்றும் துணையிருப்பேன்!'
வாழ்க நீ அம்மா!"
இவ்வாறு வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

