குழந்தைகள் காப்பகமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ பரவலில், 11 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் இடம்பெற்றுள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்த இந்தக் காப்பகத்தில், கடந்த வியாழக்கிழமை (16) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதி…

குழந்தைகள் காப்பகமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ பரவலில், 11 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் இடம்பெற்றுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்த இந்தக் காப்பகத்தில், கடந்த வியாழக்கிழமை (16)  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 19 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காப்பகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் (ஏசி) ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்த காப்பகத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.