காசாவில் பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுவதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான சர்வதேச விசாரணைக்கு, இந்தியாவின் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சீனி…

காசாவில் பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுவதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மிக முக்கியமான சர்வதேச விசாரணைக்கு, இந்தியாவின் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சீனிவாசன் முரளிதர் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா சுதந்திர சர்வதேச விசாரணைக்குழு வெளியிட்டுள்ள 94 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டு காலப் போரில் காசாவில் மட்டும் குறைந்தது 20,179 பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். ட்ரோன் தாக்குதல்கள் இது ஒட்டுமொத்த பாலஸ்தீன உயிரிழப்புகளில் சுமார் 30 சதவீதமாகும். மேலும், 44,000க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், சுமார் 58,000 சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர்.

ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் துல்லியமான ட்ரோன் தாக்குதல்கள் மூலம் சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டதையும், மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பட்டினி மற்றும் நோய்களையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

64 வயதான ஓய்வுபெற்ற நீதிபதி சீனிவாசன் முரளிதர், இந்தியாவில் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றவர்.

கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, ஆளும் பாஜக அரசியல்வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, நள்ளிரவோடு நள்ளிரவாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

அரசாங்கத்திற்கு எதிராக துணிச்சலாகச் செயல்பட்டதால் அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், தற்போது ஐநா அவரை இந்த சர்வதேச விசாரணைக்கு தலைவராக்கியுள்ளது. சர்வதேச அரசியல் வல்லுநர்கள் இந்த அறிக்கை தொடர்பாக நீதிபதி முரளிதர் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், "பாலஸ்தீன சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்படும் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சர்வதேச அளவில் தங்களுக்கு அழுத்தங்களும் அபாயங்களும் இருந்தாலும், அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இஸ்ரேல் இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ள போதிலும், சர்வதேச சட்டங்கள் ஏன் பாலஸ்தீனத்தில் வேலை செய்யவில்லை என்ற உலக நாடுகளின் கேள்விக்கு இந்த அறிக்கை மிக முக்கியப் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.