இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மென்பொருள் பொறியாளர் அனந்தவாணி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அனந்தவாணி, மாற்றுத்திறனாளியான தனது தந்தையையும், உடல்நலக்…
இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மென்பொருள் பொறியாளர் அனந்தவாணி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அனந்தவாணி, மாற்றுத்திறனாளியான தனது தந்தையையும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயையும் பராமரிக்கும் நோக்கில் வீட்டில் இருந்தபடியே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு தனது திருமணத்தையும் தொடர்ந்து ஒத்திவைத்து வந்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கும் சியாம் பாபு என்ற ஆட்டோ சாரதிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சியாம் பாபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அனந்தவாணி அறிந்ததைத் தொடர்ந்து, அவருடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சியாம் பாபு, சம்பவத்தன்று இரவு அனந்தவாணியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அனந்தவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள சியாம் பாபுவைக் கைது செய்வதற்காக சிறப்புப் பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

