Colombo (News 1st) - காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே க…

Colombo (News 1st) - காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே காட்டுத்தீ சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர தெரிவித்துள்ளார்.காடுகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை 1995 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வன பாதுகாப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டிற்காக இவ்வாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர தெரிவித்துள்ளார்.