நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசால…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, இந்த அதிகாரிகளின் நலம் குறித்து விசாரித்தார்.
வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 23 சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 54 கைதிகளும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, 20 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

