கை முறிவு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 18ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சை தாமதம் தொடர்பில் தந்தை வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வ…
கை முறிவு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சை தாமதம் தொடர்பில் தந்தை வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் எக்ஸ்-ரே உள்ளிட்ட பல சேவைகளை தனியார் இடங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் உரிய விளக்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

