நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் இளம் வயதுடையவர்கள என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த, புலத்சிங்கள - டெல்மல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரி தர்ஷன தரங்க அதுக…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் இளம் வயதுடையவர்கள என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த, புலத்சிங்கள - டெல்மல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரி தர்ஷன தரங்க அதுகோரலவின் இழப்பு, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற எந்தவொரு தீய பழக்கவழக்கங்களும் இல்லாத மிகவும் கனிவான குணம் கொண்ட மகன், கைதிகளிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்வார் என அவரது தாயார் கருணாவதி பெரேரா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியில் குடும்பம் அப்பாவி மக்களின் கஷ்டங்கள் குறித்து எப்போதும் கவலைப்படும் தர்ஷனவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 3 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான தர்ஷன தரங்க, 3 ஆண்டுகளுக்கு முன்பு அஷினி குமுதுமாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். உயிரிழக்கும் போது ஏழு மாதக் குழந்தை ஒன்றின் தந்தையாக அவர் இருந்துள்ளார். தர்ஷன பணி புரியும் போது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்ததும், தாயார் பலமுறை அவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவரது மனைவி மூலம் அவர் அவசர பணி நிமித்தமாக நீர்கொழும்பு சென்றிருப்பதாக அறிந்துக் கொண்டுள்ளார். மகன் உயிரிழந்த செய்தியை கேட்டுத் தந்தை கருணாசிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

