தலவாக்கலை நகரில் அமைந்துள்ள 'ஆசியன் மொபைல்' கடைக்குள் இன்று (16) காலை 9.12 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை மின்னல் வேகத்தில் திருடிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த நபர் கடையின் உர…
தலவாக்கலை நகரில் அமைந்துள்ள 'ஆசியன் மொபைல்' கடைக்குள் இன்று (16) காலை 9.12 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை மின்னல் வேகத்தில் திருடிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த நபர் கடையின் உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பி, மிகவும் லாவகமாகத் தொலைபேசியைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கெமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது தொடர்பாகக் கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.
காணொளியில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது இது குறித்த தகவல் தெரிந்தவர்கள், 0712135757 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உரிமையாளர் பொதுமக்களிடம் பணிவாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

