களுத்துறை மாவட்ட செயலகக் கட்டடத்தில் இன்று (13) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் உட்புறம் ஏற்பட்ட மின்கசிவு ஒன்றின் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினர…
களுத்துறை மாவட்ட செயலகக் கட்டடத்தில் இன்று (13) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டடத்தின் உட்புறம் ஏற்பட்ட மின்கசிவு ஒன்றின் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாக அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

