கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று…
கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று இரவு(16.07.2026) யக்கல பொலிஸ் பிரிவில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு
இதன்போது, 02 வெளிநாட்டுத் தயாரிப்பு கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாக்கூடு, 11 தோட்டாக்கள் மற்றும் 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் சுங்க வரியின்றி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 34,000 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

