இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் பெரும் உயிர்ச்சேதங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் அபாயகரமான அளவில…

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் பெரும் உயிர்ச்சேதங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் அபாயகரமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, பல இடங்களில் நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வங்காளதேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2.5 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வங்காளதேச வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, மழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.