கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம் மிகவும்…

கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.உலகக் கிண்ண இறுதிப் போட்டி

காற்றின் திசை மாறாவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தப் புகை பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.