Colombo (News 1st) கனடாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் கனடா மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காட்டுத்தீ குறித்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள…

Colombo (News 1st)  கனடாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் கனடா மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காட்டுத்தீ குறித்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு அளித்ததை அடுத்து, முறைப்பாடளிப்பதற்குப் பதிலாகத் தீயை அணைக்க அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.இதனையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா தேவையற்ற முறையில் அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றால் ஆக்கிரமிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ட்ரம்ப், கனடாவின் அலட்சியத்திற்காக புதிய வரிகளை விதிக்கப்போவதாக குறிப்பிட்டார்.கனடாவில் சுமார் 888 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 190-இற்கும் மேற்பட்டவை ஒன்ராறியோவில் எரிந்து கொண்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு கனடா இன்னும் பதிலளிக்கவில்லை. எனினும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது இரு நாடுகளின் பொறுப்பு என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.