கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக, அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தல் உள்ள ஒன்ராறியோவின் தொலைதூரக் கிராமப் பகு…
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக, அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
இந்நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தல் உள்ள ஒன்ராறியோவின் தொலைதூரக் கிராமப் பகுதியான போர்ட் ஹோப்பில் இருந்து சுமார் 600 மக்களை வான்வழியாக வெளியேற்றுவதற்குக் கனடா இராணுவம் இன்று(18) ஆயத்தமாகி வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவின் வடமேற்குப் பகுதியில் பாதைகள் குறைவாகக் காணப்படும் நிலையில், விமானப் போக்குவரத்து மூலமாகவே மக்கள் தெற்குப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.தீ விபத்து
கனேடிய இயற்கை வள அமைச்சின் தகவல்களின்படி, ஒரே இரவில் மேலும் 69 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து, தற்போது எரியும் மொத்த காட்டுத் தீயின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறண்ட வானிலையே இந்தத் தொடர் தீ விபத்துகளுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.எச்சரிக்கைகள் இந்தக் காட்டுத் தீயின் புகை காற்றின் காரணமாக அமெரிக்க எல்லைக்குள் பரவியுள்ளதால், அமெரிக்காவின் பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, மேரிலாண்ட் மற்றும் வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் காற்றுத் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
எவ்வாறாயினும், நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நாளை(19.7.2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு இந்தப் புகையினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

