நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்போது கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர்…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
இதன்போது கடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.கண்ணீர் மல்க அஞ்சலி
உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மத்தியில் ஒரு அசாதாரணமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான நியாயம் பெற்றுத்தரப்படும் என அங்கு கூடியிருந்தவர்களுக்கு இதன்போது நீதி அமைச்சர் உறுதியளித்தார்.
குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

