"கரைகளை இணைக்கும் - வாழ்வை கட்டியெழுப்பும்" 800 கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக காலி மாவட்டத்தில் 05 உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கிராமிய பாலங்களின் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. "கரைகளை இணைக்கு…

"கரைகளை இணைக்கும் - வாழ்வை கட்டியெழுப்பும்" 800 கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக காலி மாவட்டத்தில் 05 உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கிராமிய பாலங்களின் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. "கரைகளை இணைக்கும் - வாழ்வை கட்டியெழுப்பும்" 800 கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, காலி மாவட்டத்தில் 05 உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கிராமிய பாலங்களின் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நியாகம பிரதேச சபைக்குச் சொந்தமான ஹல்தொல பாலம், பலப்பிட்டிய பிரதேச சபைக்குச் சொந்தமான பெரதுடுவ பாருதொட்ட பாலம், பெந்தோட்டை பிரதேச சபைக்குச் சொந்தமான ரத்தோட்டுவில ஆச்சாரிகேவத்த பாலம், நெலுவ பிரதேச சபைக்குச் சொந்தமான கொஸ்முல்ல சமகி மாவத்தை ஓவிடபால பாலம் மற்றும் தவலம பிரதேச சபைக்குச் சொந்தமான ஜஸ்மின்வெலி வீதியின் கல்வெட் (Boku) பாலம் என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன.