கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க! முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்…
கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க அவர்கள் கடந்த சனிக்கிழமை (18) பார்வையிட்டார். 2022 ஆம் ஆண்டு உலக வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணிப்பு பணிகள் நடைபெறுவருவதுடன், குறித்த திட்டத்தின் ஊடாக மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 6000 பயனாளர்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வைத்தியர் செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

