தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர், தனது கடைக்கு வந்த ஒருவர் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடிவிட்டதாக இன்று (16) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். கடைக்கு வந்தவர் கடையில் யா…

தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர், தனது கடைக்கு வந்த ஒருவர் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடிவிட்டதாக இன்று (16) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

கடைக்கு வந்தவர் கடையில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு அந்த நபர் ஒருமுறை கடையை விட்டு வெளியேறி, இரண்டாவது முறையாக கைபேசியைத் திருடியதை பாதுகாப்பு கேமரா சி.சி ரி.வி மூலம் தரவுகள் பதிவு செய்துள்ளன.

சந்தேக நபர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கடை உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.