இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் கடல் பிராந்தியங்களில் மேற்கொள்ள…
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் கடல் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ் போதைப்பொருள், 56 கிலோ 91 கிராம் ஹாஷிஷ் மற்றும் 667 கிலோ 695 கிராம் கேரளா கஞ்சா ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் தொடர்ச்சியான கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலற்ற பாதுகாப்பான நாட்டை உருவாக்கும் நோக்கில், கடல் வழியான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

