வி.ரி.சகாதேவராஜா கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (ஜூலை 12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் ஆவார். இவர் காரைதீவில் திருமணம் முடித்தவர்…
வி.ரி.சகாதேவராஜா
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (ஜூலை 12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் ஆவார். இவர் காரைதீவில் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கு முன்னதாக, கடந்த 8ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து, பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

