Colombo (News 1st) - அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலமாக போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (15) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கதிர்காமத் திருத்தலத்த…
Colombo (News 1st) - அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலமாக போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (15) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கதிர்காமத் திருத்தலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இன்று (15) சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத்தை காணும் நோக்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.புராதன தொன்மைவாய்ந்த கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு குமண தேசிய பூங்காவிலிருந்து யால ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை கடந்த 10ஆம் திகதி திறக்கப்பட்டது.இந்த காட்டுப்பாதை எதிர்வரும் 24 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மூடப்படவுள்ளது.கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி திகதி நீர்வெட்டுடன் நிறைவடையவுள்ளது.

-557374_850x460.jpg)