கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் "தந்தை அமீர்" என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில் காலமானார். கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, கட்டார் நாட்டில் நான்கு நாட்களுக்குத் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட…
கட்டார் நாட்டின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் "தந்தை அமீர்" என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, தனது 74ஆவது வயதில் காலமானார்.
கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று அவர் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, கட்டார் நாட்டில் நான்கு நாட்களுக்குத் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நேரில் இரங்கல் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகத் தலைவர்கள் பலரும் கட்டாரில் உள்ள லுசைல் அரண்மனைக்கு வருகை தந்து, தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை நேரில் சந்தித்துத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாகத் தனது இரங்கலைத் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா, பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் அரபு நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகள் பலரும் நேரில் வந்து கத்தார் மக்களுக்கும் அதன் தலைமைக்கும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மறைந்த தந்தை அமீரின் உடல், தோஹாவில் உள்ள இமாம் முஹம்மது இப்னு அப்த் அல்-வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதி வழிபாட்டிற்குப் பிறகு, லுசைல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

