கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் மகளிர் அணி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இலங்கையுடன் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர…
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் மகளிர் அணி
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இலங்கையுடன் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அணிகள் பங்கேற்கும் மூன்று ஒருநாள் போட்டிகளும் எதிர்வரும் 23, 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்த மாதம் 31ஆம் திகதி, அடுத்த மாதம் 02 மற்றும் 04 ஆம் திகதிகளில் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபது20(T20) கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று(20) இரவு 10.00 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

