கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 கோடி 8 லட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற விமானப் பயணி சுங்கப் போதைப்பொருள் கட்ட…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 கோடி 8 லட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற விமானப் பயணி சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மலேசியாவில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடையவராகும்.
அவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொகைஇந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கொள்வனவு செய்து, டுபாய்க்கு வந்து, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று முன்தினத் காலை 09.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அடைந்துள்ளார்.இதன்போது அவர் கொண்டு வந்த பைக்குள், சொக்லட் மற்றும் டொபி அடங்கிய 03 பைகளுக்குள் 1 கிலோகிராம் 816 கிராம் எடையுடைய இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் 92 மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.
சந்தேகநபரான விமானப் பயணியும் கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

