கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை காலை துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின…
கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை காலை துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானமாகும்.

