பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்பீரியல் கொலேஜ் லண்டன் மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆய்வின்படி, மே…

பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்பீரியல் கொலேஜ் லண்டன் மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆய்வின்படி, மே மாத இறுதியில் 550 பேரும், ஜூன் மாத இறுதியில் சுமார் 2,200 பேரும் வெப்பம் சார்ந்த பாதிப்புகளால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மே மாதத்தில் 35.1 டிகிரி செல்சியஸாகவும், ஜூன் மாதத்தில் 37.7 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.தீவிர வெப்ப அலை புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்ப அலைகளுக்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் வழக்கமான வெப்பநிலையை விட 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும், ஜூன் மாத இறுதியில் நிலவிய இந்த கடும் வெப்பத்தின் காரணமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள 92 சதவீத வீடுகள் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இதே போன்ற கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுக் கட்டிடங்களில் குளிரூட்டி வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.