வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ நகராட்சி மன்றம் இது தொடர்பிலான திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, ந…

வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ நகராட்சி மன்றம் இது தொடர்பிலான திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள ஒரு உள்ளாட்சி அமைப்பால் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 4ஜி கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களின் செயற்பாடு மேலும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தலைமை அலுவலகத்திலிருந்து கணினித்திரை மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. குப்பைகளை பொது இடங்களில் வீசக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கெஸ்பேவா நகராட்சி மன்றம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களின் செயல்கள் தொடர்வதால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.